சீனாவிற்காக உளவு வேலை பார்த்த பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்த நாடு
சீனாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் மேயர் ஒருவர் மனித கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
மிகப்பெரிய மோசடி
குறித்த நபருக்கும், இன்னொரு மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், 2 மில்லியன் பெசோக்கள் அதாவது 33,832 அமெரிக்க டொலர் தொகையை அபராதமாகவும் விதித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் சிறிய நகரமான பம்பானில் நாட்டின் மிகப்பெரிய மோசடி மையங்களில் ஒன்றை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில், அந்த நகரின் மேயரான ஆலிஸ் குவோ மீதான வழக்கு பல ஆண்டுகளாக பிலிப்பைன்ஸைப் பற்றிக் கொண்டது.
அதிகாரிகள் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையால் சுமார் 800 பிலிப்பைன்ஸ் மற்றும் வெளிநாட்டினர் அங்கிருந்து மீட்கப்பட்டனர். ஆனால், பல வாரங்கள் தலைமறைவாக இருந்த 35 வயது ஆலிஸ் குவோ, கடந்த ஆண்டு கைதான நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை மொத்தமாக நிராகரித்தார்.
இந்த நிலையில், பணமோசடி குற்றச்சாட்டு உட்பட குவோ மீது இன்னும் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022ல், தலைநகர் மணிலாவின் வடக்கே உள்ள பம்பானின் மேயராக குவோ தெரிவு செய்யப்பட்டார்.
சூதாட்டம் சட்டவிரோதம்
தொடக்கத்தில் அவர் ஒரு அக்கறையுள்ள மற்றும் பச்சாதாபமுள்ள தலைவராக அங்குள்ள மக்களால் புழகப்பட்டார். ஆனால் 2024ல், ஒன்லைன் கேசினோக்களின் கீழ் ஒரு விரிவான மோசடி மையத்தை அதிகாரிகள் கண்டுபிடித்த நிலையில்,
இந்த நகரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. சீனாவில் சூதாட்டம் சட்டவிரோதம் என்பதால் அங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆலிஸ் குவோ நடத்திய ரகசிய மையங்கள் வாய்ப்பாக அமைந்தது.

முதலில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த குவோ, மொத்தம் 36 கட்டிடங்கள் செயல்பட்டு வந்த நிலம் அவருடையது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததை அடுத்து மேயர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
உண்மையில் சீனாவில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் குடும்பத்துடன் குடியேறியவர் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |