வெறும் 30 நாட்களுக்குள்... ஐந்தாவது முறையாக மிகப்பெரிய புயலை எதிர்கொள்ளவிருக்கும் ஆசிய நாடு
பிலிப்பைன்ஸ் நாடு வெறும் மூன்று வாரங்களுக்கும் ஐந்தாவது மிகப்பெரிய புயலை எதிர்கொள்ள இருப்பதாக பொதுமக்களுக்கு புதிய வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
மீண்டும் புயல் எச்சரிக்கை
டோராஜி சூறாவளியை அடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோராஜி புயலானது ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்பட்ட சேதத்தை ஏற்படுத்திய பின்னர் வலுவிழந்து கரையைக் கடந்துள்ளது.
ஆனால் புயல் உசாகி தற்போது நாட்டின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து இரண்டு நாட்கள் மட்டுமே தொலைவில் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டோராஜி புயல் காரணமாக, ஆபத்தான பகுதியில் இருந்து சுமார் 32,000 மக்கள் வெளியேற்றப்பட்டிருந்ததாக அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டிராமி புயல், யின்க்சிங் சூறாவளி மற்றும் சூப்பர் டைபூன் காங்-ரே ஆகியவையால் மொத்தம் 159 பேர்கள் மரணமடைந்துள்ள நிலையில் டோராஜி புயலால் அதிக பாதிப்பில்லை என்பதுடன், மரணமும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் டிராமி புயலால் அதிக இறப்புகள் நேர்ந்துள்ளது. பலத்த மழையுடன் ஆபத்தான் பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. உசாகி புயலானது வியாழன் கரையைக் கடக்கும் முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் இருந்தே மணிக்கு 47 மைல்கள் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்,
ஆண்டுக்கு 20 பெரும் புயல்கள்
வடகிழக்கு கடற்கரையில் பெரிய அலைகளை வீசத் தொடங்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோராஜி புயலின் போது இறப்புகள் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அரசாங்கம், தற்போதும் 15,000 மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள் மீண்டும் திறக்கப்பட்டபோதும் 29 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இன்னும் மின்சாரம் திரும்பவில்லை. கிட்டத்தட்ட 600 நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள இளையோர்கள் வகுப்புக்குத் திரும்பத் தொடங்கினர்.
உசாகியை அடுத்து Man-yi புயல் அடுத்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கக் கூடும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு 20 பெரும் புயல்கள் பொதுவாக பிலிப்பைன்ஸை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |