இன்னொரு மிக ஆபத்தான புயல்... ஆசிய நாடொன்றிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
204 பேர்களைப் பலிவாங்கிய Kalmaegi புயலின் துயரங்கள் அடங்கும் முன்னர், பிலிப்பைன்ஸ் நாட்டை இன்னொரு ஆபத்தான புயல் தாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபத்தான புயலாக
பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையை நோக்கி உயிருக்கு ஆபத்தான ஃபங்-வோங் புயல் நகர்வதாகவும், இதனால் அலைகள் ஐந்து மீற்றர் உயரத்திற்கு எழும்பும் என்றும், மிக மோசமான காற்று வீசக்கூடும் என்றும் பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடக்கும் முன்பு மிக ஆபத்தான புயலாக தீவிரமடையும் என்றும் தெரிவித்துள்ளனர். Fung-Wong புயலானது கிழக்கு பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் ஏற்கனவே பலத்த மழை மற்றும் காற்றுடன் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது என்றே பிலிப்பைன்ஸ் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், Fung-Wong புயலானது மொத்த நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. உள்ளூரில் Uwan புயல் என அறியப்படும் Fung-Wong புயல் காரணமாக தற்போது மணிக்கு 140 கி.மீ வேகத்தில் காற்று வீசத்தொடங்கியுள்ளது.
இது கரையை நெருங்கும் போது மணிக்கு 185 கி.மீ என இருக்கும் என்றும் தெரிவிதுள்ளனர். வீடுகளை சேதப்படுத்தவும், மரங்களையும் கட்டமைப்புகளையும் கவிழ்க்கவும் போதுமான சக்தி வாய்ந்தது.
கிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணங்களில், குறிப்பாக பிகோல் பகுதியில் 200 மிமீ வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், கடலில் எவரும் புறப்பட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

எச்சரிக்கை
பல உள்ளூர் அரசாங்கங்கள் திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். விமான சேவையும் சில விமானங்களை ரத்து செய்துள்ளது.
கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ் முழுவதும் சேதப்படுத்தி சென்ற நிலையில், தற்போது Fung-Wong புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்மேகி புயலால் பிலிப்பைன்ஸில் 204 பேரும், வியட்நாமில் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.

வியட்நாமில் கிட்டத்தட்ட 2,800 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 500,000 பேர் மின்சாரம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில், பெருவெள்ளம் வீடுகளை மூழ்கடித்ததுடன், தெருக்களில் குப்பைகள் நிறைந்துள்ளன. இதனிடையே, உலக வெப்பநிலை அதிகரிக்கும் போது கல்மேகி போன்ற புயல்கள் மிகவும் சக்திவாய்ந்ததாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |