77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி
மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை சதம் விளாசினார்.
பெர்ரி, லிட்ச்ஃபீல்டு
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடந்து வருகிறது. 
நவி மும்பையில் நடந்து வரும் இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடி வருகிறது. அலிஸா ஹீலி 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, போஃபே லிட்ச்ஃபீல்டு மற்றும் எல்லிஸ் பெர்ரி கைகோர்த்தனர்.
எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) நிதானமாக ஓட்டங்களை சேர்க்க, போஃபே லிட்ச்ஃபீல்டு (Phoebe Litchfield) அதிரடியில் மிரட்டினார்.
77 பந்துகளில் சதம்
இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய அவர் 77 பந்துகளில் சதம் விளாசினார். இது அவரது முதல் உலகக்கிண்ண சதம் ஆகும். 
மேலும், உலகக்கிண்ண நாக் அவுட் போட்டிகளில் குறைந்த வயதில் சதம் அடித்த வீராங்கனை (22 வயது) என்ற சாதனையையும் படைத்தார்.
மொத்தம் 93 பந்துகளை எதிர்கொண்ட போஃபே லிட்ச்ஃபீல்டு 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 119 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |