செல்போன் வெடித்து தீயில் முகம் கருகிய பயங்கரம்! வைரலாகும் வீடியோ
சீனாவில் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
51 நொடிகள் கொண்ட இந்த பயங்கரமான சிசிடிவி காட்சியை South China Morning Post அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ஒருவர் தனது தோழியுடன் பேசியபடி நடந்து செல்கிறார். அப்போது அவர் தனது பக்கவாட்டில் மாட்டியிருந்த ஒரு பையில் ஏதோ ஒன்று வெடித்து, தீப்பிழப்பு வெளியேறுகிறது.
அதில் அந்த நபரின் கை, இடுப்பு மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்படுகிறது. மேலும் அவரது தலை முடி மற்றும் இமை முடிகள் நெருப்பில் பொசுங்கிவிடுகிறது.
சூட்டை தாங்கமுடியாமல் அவர் அந்த பையை தூக்கி தூரமாக எறிந்துவிடுகிறார். இதனை அங்கிருந்த சில நபர்கள் பார்த்து அதிர்ச்சியடைகின்றனர்.
This is the shocking moment a phone catches fire inside a man’s bag in China. pic.twitter.com/4C5zz8Ov6t
— SCMP News (@SCMPNews) April 20, 2021
இந்த காட்சிகள் அங்கிருந்த ஒரு கடையின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.
வெடித்து சிதறியது சம்சுங் போன் என்றும், அதை 2016-ல் வாங்கியதாகவும் போனின் உரிமையாளர் கூறியுள்ளார். மேலும் வெடிக்கும் பொது அந்த போன் சார்ஜ் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருவதாக கூறப்பட்டுள்ளது.