Smartphoneல் Internet வேகம் குறைவாக உள்ளதா? அதிகரிக்க இதை செய்தால் போதும்
தொலைபேசியில் இணைய வேகத்தை விரைவாக அதிகரிக்க நீங்கள் பின்பற்றக்கூடிய சில எளிய வழிகள் உள்ளன.
தொலைபேசியில் குறைந்த RAM இருக்கும்போது அல்லது Malware, Virusகள் இருந்தால் இணைய வேகம் குறைகிறது.
உங்கள் தொலைபேசியின் Software பழைய பதிப்பில் இருந்தாலும், அது உங்கள் இணைய வேகத்தைக் குறைக்கும்.
உங்கள் Data நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறும் போது அல்லது தேவையற்ற Apps பின்னணியில் இயங்கும் போது Data வேகம் குறைகிறது.
server சிக்கல்கள், Apps சிக்கல்கள் அல்லது Router சிக்கல்கள் கூட இணைய வேகத்தைக் குறைக்கலாம்.
சில நேரங்களில் தொலைபேசியின் பின்னணியில் பல செயலிகள் திறந்திருக்கும். அவை அதிக Dataவை பயன்படுத்துகின்றன. தொலைபேசி அமைப்புகளுக்குச் சென்று பயன்படுத்தப்படாத Appsகளை Close செய்ய வேண்டும்.
Network settingsஐ Restore செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியின் இணைப்பைப் புதுப்பிக்கலாம். இந்த செயல்முறை இணைய வேகத்தை அதிகரிக்கும்.
உங்கள் தொலைபேசியின் Software பழைய பதிப்பில் இருந்தால், அதை சமீபத்திய பதிப்பிற்கு Update செய்யவும்.
நீங்கள் Data Limitationஐ மீறக்கூடாது. சரியான data திட்டத்தைத் தேர்வுசெய்யவும், இல்லையெனில், தேவைப்பட்டால் புதிய திட்டத்தைப் பெறவும்.
சில நேரங்களில் தொலைபேசியை Restart செய்வது Network connectionஐ மீட்டமைக்கும். இது இணைய வேகத்தை அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |