Phonepe, GPay, Paytm பயனர்களுக்கு எச்சரிக்கை.., அக்டோபர் 1 முதல் UPI கட்டண விதிகள் மாற்றம்
அக்டோபர் 1-ம் திகதி முதல் Phonepe, GPay, Paytm பயனர்கள் இந்த பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.
UPI கட்டண விதிகள் மாற்றம்
தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் அனைவரும் Phonepe, GooglePay அல்லது PayTm போன்ற UPI பயன்பாடுகள் மூலம் ஓன்லைன் பணம் செலுத்துகிறார்கள்.
இந்நிலையில், அக்டோபர் 1 முதல் UPI கட்டண விதிகள் மாற்றம் செய்யப்படுவதாக NPCI கூறியுள்ளது. அதாவது UPI பயன்பாடுகளில் உள்ள peer-to-peer (P2P) "collect request" என்கிற அம்சம் அகற்றப்படும்.
P2P Collect Request அம்சம் என்னவென்றால், ஒரு பயனர் மற்றொரு UPI பயனரிடமிருந்து பணம் கோருவதன் மூலம் மற்றொரு பயனர் தனது UPI பின்னை உள்ளிட்டு பணம் செலுத்துவார்கள். ஆனால், இந்த அம்சத்தில் சில காலமாக மோசடி நடைபெற்று வருகிறது.
இதனால் NPCI இந்த அம்சத்தை UPI பயன்பாடுகளிலிருந்து அகற்ற முடிவு செய்துள்ளது. இப்போது அக்டோபர் 1 முதல், இந்த அம்சம் UPI பயன்பாடுகளில் தெரியாது.
நீங்கள் UPI பயன்பாடுகள் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் அல்லது இதற்கான தொடர்பு எண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மேலும் இதனால், Flipkart, Amazon, Swiggy, IRCTC போன்ற வணிக சேவைகள் பாதிக்கப்படாது. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், முன்பு போலவே வசூல் கோரிக்கைகளை அனுப்ப முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |