பாஸ்பரஸ் அல்ல., உக்ரைனில் வித்தியாசமான ஏவுகணைகளைப் பயன்படுத்தும் ரஷ்யா! வைரல் வீடியோ
ரஷ்யா உக்ரைனில் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக செய்திகள் பரவிய நிலையில், அது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 12, 2022 அன்று, லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனியப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போபாஸ்னா நகரத்தின் பகுதியில் ஏறி நட்சத்திரங்கள் நெருப்பு மழையாக பொழிவது போன்ற வெடிமருந்துகளின் பயன்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல், டான்பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளிலும் அதேபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
அது தொடர்பில் வெளியான தகவல்களில், ரஷ்யர்கள் உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிகுண்டுகளை பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ரஷ்யாவின் ஆயுதப் படைகள் உண்மையில் பாஸ்பரஸ் குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை. ரஷ்யர்கள் உக்ரைனுக்கு எதிராக MLRS (Multiple Launch Rocket System) மூலம் 9M22S Incendiary Munitions எனும் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன என்பது இப்போது தெரியவந்துள்ளது.
இந்த எரியக்கூடிய வெடிமருந்துகள் மற்றும் லைட்டிங் வெடிமருந்துகளின் விளைவு பெரும்பாலும் பாஸ்பரஸ் வெடிமருந்துகள் என குழப்பமடைய வைக்கிறது.
வீடியோ ஆதாரம்:
????? Video sent by a friend from National Guard unit in Donbas who we are helping with protective gear. No words really!#StandWithUkraine pic.twitter.com/a8Jq45kQy1
— Harri_EST???? (@Harri_Est) May 26, 2022
பல வெடிமருந்துகள் ஒரு வளைவில் பறந்து, காற்றில் வெடித்து விழுவதை இந்த வீடியோ காட்டுகிறது. இந்த விளைவு போரின் போது உக்ரைனின் பிற பகுதிகளிலும் காணப்பட்டது.
9M22S BM-21 Grad எனும் மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர்களால் (MLRS) பயன்படுத்தப்படும் 9M22S ராக்கெட்டுகள் இதேபோன்ற விளைவைக் கொண்டுள்ளன.
9M22S ஏவுகணையில், வழக்கமாக பயங்கரமாக வெடிக்கும் குண்டுடை பயனடுத்தாமல், துண்டு துண்டான பல சிறிய குண்டுகள் பொறுத்தப்பட்டிருக்கும். மேலும், 9M22S ஏவுகணை 9H510 warhead கொண்டுள்ளது. இந்த ஏவுகணையின் வார்ஹெட் மெக்னீசியம் கலவை ML5 மற்றும் டெர்மைட் போன்ற பைரோடெக்னிக் கலவையால் செய்யப்பட்ட 180 கூறுகளைக் கொண்டுள்ளது.
இந்த 9M22S Incendiary Munitions, வெகுஜன தீயை உருவாக்குவதன் மூலம் எதிரியின் மனித சக்தி மற்றும் உபகரணங்களை அழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 2014 ஜூலையில், கிழக்கு உக்ரைனில் இந்த 9M22S வெடிக்குண்டடின் எரிந்த காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 14, 2014 அன்று, Ilovaisk-ல் உள்ள உள்ளூர்வாசிகள், ஒரு அசாதாரண ஒலியுடன் கூடிய பல வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும், அது "வானத்திலிருந்து விழும் தீப்பந்தங்களாக" மாறிய ஒரு மாபெரும் "வானவேடிக்கை" போலவும் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் ரஷ்ய இராணுவம் Ilovaisk பகுதியில் உக்ரேனிய இராணுவத்தின் நிலையை தாக்கியது.
2014-ல் Ilovaisk பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளையும், 2022 இல் Popasna பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் ஒப்பிடுகையில், 9M22S எறிபொருளின் விளைவின் அடையாளத்தைக் கண்டறிய முடியும்.