இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்? வெளிப்படையாக பெயரை கூறிய பீட்டர்சன்
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய இழந்ததை தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகினார்.
கோலி பதவி விலகயதை தொடர்ந்து, இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா சிறந்த தேர்வாக இருப்பார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது பேட்டியளித்த கெவின் பீட்டர்சன், ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த டெஸ்ட் கேப்டனாக இருப்பார், ஏனெனில் அவரது தலைமைத் தரம் மிகவும் நன்றாக இருக்கிறது மற்றும் ஐந்து ஐபிஎல் கோப்பைகளை அவர் வென்றுள்ளார்.
எனவே டெஸ்ட் கேப்டன் பதவிக்கான பந்தயத்தில் அவரை யாராலும் வெல்ல முடியாது என நான் நினைக்கிறேன்.
விராட் கோலி ஒரு சிறந்த கேப்டன், ஆனால் பதவி விலக விரும்பினால் அது யாருடைய தனிப்பட்ட முடிவாக இருக்கலாம், அதில் யாரும் தலையிட முடியாது என்று பீட்டர்சன் கூறினார்.