பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர்! 2 மாதத்திற்கு பிறகு நடந்த சோகம்.. மருத்துவர்கள் சொன்ன தகவல்
அமெரிக்காவில் 2 மாதத்திற்கு முன்பு பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Maryland பகுதியில் வசித்து வந்தவர் David Bennett (57). இவர் சில மாதங்களுக்கு முன்பு இதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதாலும், அவரது உயிரை காப்பாற்றவும் அவருக்கு பன்றியின் இதயம் பொருத்த மருத்துவர்கள் முடிவெடுத்தனர். இந்த முடிவுக்கு David Bennett மற்றும் அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு கடந்த ஜனவரி 7ஆம் திகதி அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்து முடிந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை நோயாளிக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பொருத்தினார்கள்.
இந்த நிகழ்வு உலக அளவில் பாராட்டப்பட்டதையடுத்து மருத்துவத்துறையில் மாபெரும் சாதனையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இரண்டு மாதமே ஆன நிலையில் David Bennett நேற்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
2 மாதத்தில் டேவிட் பென்னட் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் மரணத்திற்கு சரியான காரணத்தை இதுவரை மருத்துவர்கள் கூறவில்லை. ஆனால் சில நாள்களாகவே David Bennett உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.