புறப்படும் நேரத்தில் விமானி செய்த காரியம்: உடனடி கைது., தப்பித்த பயணிகள்
பிரித்தானியாவில் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் குடிபோதையில் இருந்ததற்காக விமானி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானி கைது
விமானம் புறப்படுவதற்க்கு 30 நிமிடங்களுக்கு முன்பு குடிபோதையில் இருந்ததற்காக டெல்டா ஏர்லைன்ஸ் விமானி கைது செய்யப்பட்டார்.
ஸ்காட்லாந்தில் இருந்து நியூயார்க் செல்லும் விமானத்தை ஓட்டுவதற்கு முன்னதாக, டெல்டா ஏர்லைன்ஸ் விமானி ஒருவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
thebulkheadseat
போயிங் 767 விமானம் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏழு மணி நேர பயணத்தை மேற்கொள்ள இருந்தது.
ஆனால், அந்த விமானம் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் எடின்பர்க் விமான நிலையத்தில் 61 வயதான அந்த விமானி கைது செய்யப்பட்டார்.
ரெயில்வே மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு சட்டம் 2003ன் கீழ் அமைக்கப்பட்ட சட்ட வரம்பு 0.02க்கு மேல் அவரது இரத்தத்தில் ஆல்கஹால் அளவு கண்டறியப்பட்டதை அடுத்து விமானி கைது செய்யப்பட்டார்.
Reuters
இதனால் அந்த விமானம் எதிர்பாராத விதமாக ரத்து செய்யப்பட்டது. இந்த ரத்து மூலம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
விமானம் ரத்து செய்யப்பட நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா அல்லது வேறு விமானத்தில் அவர்கள் நியூயார்க் அனுப்பிவைக்கப்பட்டனரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |