வேலைக்கு விமானத்தில் பயணிக்கும் இன்டர்ன் மாணவி! பணத்தை மிச்சம் செய்யும் ஆச்சரியம்
அமெரிக்காவில் கல்லூரி மாணவி ஒருவர் intern பயிற்சிக்கு விமானத்தில் பயணிக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம்.
இன்டர்ன் மாணவியின் விமான பயணம்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த 21 வயதான சோபியா செலென்டானோ (Sophia Celentano) என்ற கல்லூரி இன்டர்ன் மாணவி தனது தனித்துவமான பயண உத்தியால் சமூக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நியூ ஜெர்சியில் ஒரு நிறுவனத்தில் இன்டர்ன் செல்லும் அவர் அங்கு ஒரு தங்குமிடத்தை வாடகை எடுப்பதற்கு பதிலாக, அவர் ஒவ்வொரு வாரமும் சார்லஸ்டனில் இருந்து நெவார்க் வரை விமானத்தில் பயணம் செய்கிறார். இதன்மூலம் அவர் ஒரு பெரிய செலவை தவிர்த்து பணத்தை மிச்சம் செய்வதாக கூறுகிறார்.
இது குறித்த அவரது TikTok வீடியோ வைரலாக பரவி, பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
100 டொலர் விமான பயணம்
மாதத்திற்கு $4000-க்கும் அதிகமான வாடகையைத் தவிர்க்க, ஒவ்வொரு வாரமும் சென்று வர $100 சுற்று-பயண விமானத்தைத் தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார்.
மான்ஹாட்டனில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதற்கான சராசரியாக ஒரு மாதத்திற்கு $4,241 வரை செலவாகும்.
இவ்வாறு அவர் விமானத்தில் சென்று வருவதன்மூலம் அவரது பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஒரு தனித்துவமான சாகச உணர்வையும் வழங்குவதாக கூறுகிறார்.
சேமிப்பு
பட்ஜெட்டுக்கு ஏற்ற விமானங்களுக்கு பெயர் பெற்ற ஸ்பிரிட் ஏர்லைன்ஸைத் (Spirit Airlines) தேர்ந்தெடுப்பதன் மூலம், Celentano தனது பயணச் செலவுகளை ஒப்பீட்டளவில் குறைவாக வைத்திருக்க முடிகிறது.
வாராந்திர விமான பயணத்திற்கு அவருக்கு தோராயமாக $100 செலவாகும், மேலும் Uber சவாரிகளில் விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் கூடுதலாக $100 செலவழிக்கிறார், மேலும் $25 உணவுக்காகச் செலவிடுகிறார்.
மொத்தத்தில், 10 வார பயிற்சிக்கான அவரது பயணச் செலவு $2,250 ஆகும். இதன்முலம் குறைந்தபட்சம் $2,000 சேமிப்பதாக Celentano மதிப்பிடுகிறார்.