விமான கண்காட்சியின்போது நேர்ந்த விபத்து..வானில் பறந்து உயிர் தப்பிய வீரர்கள்..பரபரப்பு காட்சிகள்
அமெரிக்காவில் விமான கண்காட்சியின்போது ஜெட் தீப்பற்றியதில், விமானிகள் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விமான கண்காட்சி
மிச்சிகனில் Ypsilantiயின் வில்லோ ரன் விமான நிலையத்தில் Thunder Over Michigan air எனும் விமான கண்காட்சி நடந்தது.
இதில் கலந்துகொண்ட விமானங்களில் MiG-23 கிராஃப்ட் எனும் ஜெட் விமானம் எதிர்ப்பாராத விதமாக விபத்திற்குள்ளானது.
வானில் பறக்கும்போது ஜெட் விமானம் தீப்பற்றியபோது, விமானிகள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட வீரர்கள்
அதன் பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விமானிகள் விரைவில் குணமடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் விபத்திற்குள்ளான ஜெட் விமானம், அடுக்குமாடி வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விமானம் ஆளில்லாத வாகனங்கள் மீது மோதியதாக WDIV தெரிவித்துள்ளது.
மேலும், விபத்தின் விளைவாக வேறு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போதைய நிலவரப்படி உயிர்சேதம் ஏதும் இல்லை.
இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |