விமான விபத்தில் சிக்கினால் உயிர் தப்பிப்பது எப்படி? விமானி பகிர்ந்த சில முக்கிய தகவல்கள்
விமான விபத்தில் சிக்கினால் தப்பிப்பது எப்படி என்ற தந்திரத்தை விமானி ஒருவர் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக விமான விபத்தில் சிக்கிவிட்டால், உயிர் தப்பிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக தோன்றினாலும், நடக்கும் விமான விபத்துகளில் 95 சதவீதமான விபத்துகளில் உயிர்பிழைக்க சாத்தியக் கூறுகள் உண்டு.
ஆனால் அதற்கு சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஏனெனில், கடந்த வாரம் அமெரிக்காவில், Houston Executive விமான நிலையத்தில் இருந்து விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் என 20 பேருடன் புறப்பட்ட MD-80-வகை கொண்ட சிறிய விமானம் விபத்தில் சிக்கி கொளுந்து விட்டு எரிந்து சாம்பலானது.
There were 21 people on the plane when it crashed here in Waller County. No reports of serious injuries. @khouron is LIVE now with updates. @DavidGonzKHOU is on the way to the scene. https://t.co/wxuNi3nWRV pic.twitter.com/v4KgQpABGs
— KHOU 11 News Houston (@KHOU) October 19, 2021
இதனால் இந்த விமானத்தின் உள்ளே இருந்த அனைவரும் பலியாகியிருப்பார்கள் என்று நினைத்த போது, விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிரிழக்கவில்லை, இரண்டு பேருக்கு மட்டுமே சிறிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தது. இதைக் கண்ட பலரும் இது எப்படி சாத்தியம் என்று அந்த வீடியோவை இணைத்தில் அதிக அளவில் டிரண்டாக்கி வந்தனர்.
இந்நிலையில், ஒரு அனுபவம் வாய்ந்த விமானி தகவல் பகிர்வு தளமான Quora-வில் இது தொடர்பான உதவிக் குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அதில், நீங்கள் விமான விபத்தில் சிக்கியிருந்தால் என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சந்தர்ப்த்தின் போது நாம் எப்படி தயாராக வேண்டும் என்ற விஷயங்களை கூறியுள்ளார்.
முதலில் விமானம் விபத்தில் சிக்கப் போகிறது என்றால், உங்கள் பாக்கெட்டுகளில் உள்ள கூர்மையான அனைத்தையும் எடுத்து விட வேண்டும். குறிப்பாக உங்கள் பெல்ட், ஹை ஹீல்ஸ் ஷுக்களையும் கழற்றிவிட வேண்டும்.
விமானப் பணிப்பெண்ணிடம் இருந்து அறிவுறத்தல்களை பெறும் வரை பயணிகள் தங்கள் இருக்கைகளிலே இருக்க வேண்டும், அவர்கள் சொல்லும் வரை எந்த ஒரு கதவுகளையும், ஜன்னல்களையும் திறக்கக் கூடாது. இது மிகவும் முக்கியமான ஒன்று.
ஒருவேளை அந்த விமானத்தில் புகை இருந்தால், துணியை ஈராமாக வைத்திருக்கவும்(வெளியேறும் போது புகை இருந்தாலும்), அது சுவாசிப்பதற்கு உதவும். அதுவே விமானம் நீரில் தரையிரங்கி விட்டால், நீங்கள் அணிந்திருக்கும் உயிர்காக்கும் life vest-ஐ உயர்த்திவிடாதீர்கள்.
ஏனெனில் விமானம் தண்ணீரால் நிரப்பப்பட்டால், விமானத்தின் கூரையில் உள்ளே சிக்கிக் கொள்ள நேரிடும், நீருக்கடியில் நீந்த முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விமானத்தில் பொதுவாக பயணிகள் ஏறும் போது, பலருக்கும் அவசரகால வெளியேறும் வழி எங்கிருக்கிறது என்பது தெரியாது. எனவே விமானத்தில் தங்கள் இருக்கைக்கு செல்லும் போது, அவர்கள் அருகில் கதவுகள் எங்கே இருக்கின்றன என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். இது விபத்து நேரத்தில் உதவலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.