பயணிகள் விமானத்தை விபத்தில் சிக்கவைக்க முயன்ற விமானி: கொலை முயற்சி வழக்கு பதிவு
பயணிகள் விமானம் ஒன்றை விபத்தில் சிக்கவைக்க முயன்ற விமானி மீது 83 பிரிவுகளில் கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
பணியில் இல்லாத விமானி
ஞாயிறன்று இரவு அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 80 பயணிகளுடன் குறித்த விமனாமனது சான் பிரான்சிஸ்கோ பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த விமானத்தில் பயணித்த பணியில் இல்லாத விமானியான 44 வயது ஜோசப் டேவிட் எமர்சன் திடீரென்று விமானிகளின் அறைக்குள் நுழைந்து விமான இயந்திரங்களை முடக்க முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட விமானிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் நடந்த சம்பவத்தை கட்டுப்பாட்டு அறைக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து விமானம் Portland பகுதிக்கு திருப்பி விடப்பட்டது. ஜோசப் டேவிட் எமர்சன் Portland பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் Portland பொலிசார் மற்றும் எஃப்.பி.ஐ அதிகாரிகளும் விசாரணை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |