பனிச்சரிவில் சிக்கிய உலகப் புகழ்பெற்ற மலையேற்ற வீரர்: நண்பர்கள் உறுதிப்படுத்திய துயர செய்தி
பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா உயிரிழந்துள்ளார்.
பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர் உயிரிழப்பு
உலகின் 12 வது மிகப்பெரிய மலையான பிராட் பீக்கில்(Broad Peak,) நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி புகழ்பெற்ற மலையேற்ற வீரர் நிர்மல் நிம்ஸ்டாய் புர்ஜா (Nirmal 'Nimsdai' Purja) உயிரிழந்துள்ளார்.
நேபாள வம்சாவளியை சேர்ந்த நிர்மல் நிம்ஸ்டாயின் சாகச நிறுவனம் மற்றும் அவரது நண்பர்கள் இன்ஸ்டாகிராமில் நிர்மல் நிம்ஸ்டாயின் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த பனிச்சரிவை தொடர்ந்து நிர்மல் நிம்ஸ்டாய் உடன் மலையேறிய 5 மலையேற்ற வீரர்களும் காணாமல் போயிருந்தனர்.
பாகிஸ்தானின் கில்ஜித் - பால்டிஸ்தான் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடர் அமைந்துள்ள பிராட் பீக்கின் வெஸ்ட் ரிட்ஜ் பாதையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Since our report, it is now confirmed that Nirmal Purja, among the greatest climbers in history, is dead along with all 9 other members on his expedition to Broad Peak. The voice message he sent me from Camp II, short of the summit on Wednesday night may well be his last recorded… https://t.co/4Rc354LeH1
— Vishnu Som (@VishnuNDTV) August 1, 2026
இது கடல் மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 21,600 முதல் 21,850 அடி உயரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |