இந்தியாவில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் இரண்டையும் தொடும் ஒரே இடம்.., எது தெரியுமா?
இந்தியா அதன் பரந்துவிரிந்த கடற்கரை பகுதிக்கென உலகில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது.
அதன்படி இந்தியாவிற்கு மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காளவிரிகுடாவும் பரந்துவிரிந்த காணப்படுகின்றன.
இந்நிலையில், இந்த இரண்டு பெரிய பெருங்கடல்களின் கடற்கரையையும் ஒரே நேரத்தில் எந்த மாநிலமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனால், புதுச்சேரி என்ற யூனியன் பிரதேசம் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய இரண்டு கடல்களின் கடற்கரைகளையும் கொண்டுள்ளது.
அதாவது, புதுச்சேரி யூனியன் பிரதேசம் நான்கு தனித்துவமான பிராந்தியங்களால் ஆனது. அவை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாஹே ஆகும்.
இவை நான்கும் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாமல் வெவ்வேறு மாநிலங்களில் பரவியுள்ளன.
இந்த தனித்துவமான அமைப்பால் புதுச்சேரி இரண்டு கடற்கரைகளான வங்காளவிரிகுடாவின் கிழக்கு கடற்கரையையும், அரபிக்கடலின் மேற்கு கடற்கரையையும் கொண்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் தமிழ்நாட்டிலும், ஏனாம் ஆந்திரப் பிரதேசத்திலும், மாஹே கேரளாவிலும் அமைந்துள்ளன.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்டங்கள் வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்துள்ளன.
அதேபோல், புதுச்சேரியின் மேற்குப் பகுதிகளிலும், கேரளாவின் மத்திய பகுதிகளிலும் அமைந்துள்ள மாஹே அரபிக்கடலை எல்லையாக கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |