ரஷ்யாவில் பரவி வரும் பிளேக் நோய்: புடினுடன் விரைவில் பேசுவேன்: டிரம்ப் அறிவிப்பு
ரஷ்யாவில் பரவி வரும் பிளேக் நோய் பரவல் குறித்து ஜனாதிபதி புடினுடன் விரைவில் பேசுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் பரவி வரும் பிளேக் நோய்
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் மாகாணத்தில் உள்ள பிளேக் தடுப்பு ஆராய்ச்சி மையத்தில் பாக்டீரியா இருந்த டெஸ்ட் டியூப் தவறுதலாக கீழே விழுந்து உடைந்தது.
இந்த சம்பவத்தில் பெண் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு அவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த பெண் ஆராய்ச்சியாளருடன் பணியாற்றிய நபர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் ரஷ்யாவில் பிளேக் நோய் பரவி வருவதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
புடினுடன் விரைவில் பேசுவேன்
இந்நிலையில் ரஷ்யாவில் பிளேக் நோய் பரவி வருவதாக வெளியாகும் செய்தி குறித்து ஜனாதிபதி புடினுடன் விரைவில் பேசுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் தெரிவித்த கருத்தில், ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பிளேக் பாதிப்பு இருக்கலாம் என்பது குறித்து விவாதிக்க புடினுடன் தொலைபேசியில் பேச திட்டமிட்டு உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உளவுத்துறையும் ஆழமான விவாதத்தில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக ரஷ்யாவில் இருந்து வெளியேறுமாறு மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.