ட்ரோன்களை அனுப்பி கிம் ஜோங் உன்னை அச்சுறுத்த திட்டம்: ஜனாதிபதி ஒருவரின் சதி அம்பலம்
வட கொரியாவிற்கு ரகசியமாக ட்ரோன்களை அனுப்பி கிம் ஜோங் உன்னை கோபப்படுத்த தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி சூழ்ச்சி செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
வடகொரியாவை ஆத்திரமூட்ட
தென் கொரியாவில் இராணுவச் சட்டத்தஒ அமுலுக்கு கொண்டுவரும் வகையில் வடகொரியாவை ஆத்திரமூட்டவே இந்த நடவடிக்கை என்றும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் மற்றும் இரண்டு மூத்த பாதுகாப்பு அதிகாரிகளின் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் அலைபேசியில் காணப்பட்ட குறிப்புகள் இதை உறுதி செய்துள்ளன.
கடந்த டிசம்பரில் தென் கொரியாவில் வெளியிடப்பட்ட நள்ளிரவு இராணுவக் கட்டுப்பாட்டு உத்தரவை நியாயப்படுத்தும் வகையில் கிம் ஜாங் உன்னின் கோபத்தை தூண்டவே ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ள ஆதாரங்களில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. வட கொரியாவின் ஆட்சியை குறைகூறும் வகையில் துண்டுப்பிரசுரங்களை வீசுவதற்காக அந்நாட்டிற்கு ரகசிய ட்ரோன்களை தென் கொரியா அனுப்பியதாக கடந்த அக்டோபரில் வட கொரியாவும் உறுதி செய்துள்ளது.
மட்டுமின்றி, தென் கொரியாவின் ட்ரோன் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார் கிம் யோ ஜோங். அத்துடன் தென் கொரியாவை இணைக்கும் சாலைகள் மற்றும் ரயில் சேவைகளைத் துண்டிக்க இருப்பதாகவும் அறிவித்தது.
புதிய நெருக்கடி
இந்த நிலையில், டிசம்பரில், தென் கொரியாவை வட கொரிய கம்யூனிச சக்திகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி ஜனாதிபதி யூன் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
ஆனால், தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்தை நிராகரிப்பதாக வாக்களித்து ஜனாதிபதியின் முடிவை புறக்கணித்ததை அடுத்து சில மணி நேரங்களுக்குள் அந்த அவசர ஆணை நீக்கப்பட்டது.

தற்போது சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ளும் யூனுக்கு வெளியாகியுள்ள இந்த ஆதாரங்கள், புதிய நெருக்கடியை உருவாக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் தென் கொரியாவின் இராணுவச் சட்டத்தை அமுலுக்கு கொண்டுவர ட்ரோன்களை அனுப்பி வட கொரியாவை அச்சுறுத்தவில்லை என்றே யூன் விளக்கமளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |