பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மீது தாக்குதல் நடத்த திட்டம்: 13 பேர் மீது விசாரணை
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 13 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார்கள்.
பொது இடத்தில் மேக்ரானைக் கத்தியால் குத்த திட்டம்
அந்த குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் Jean-Pierre Bouyer என்ற நபர், பொது இடத்தில் வைத்து மேக்ரானைக் கத்தியால் குத்துவது குறித்து விவாதித்ததாகவும், பாதுகாப்பு அதிகாரிகளால் அதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாமல் போனதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக Moselle என்ற இடத்துக்குச் சென்றிருந்ததை அறிந்த Bouyer, அங்கு காரில் பயணித்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த 13 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.
இந்த வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி முதல் பிப்ரவரி 2ஆம் திகதி வரை நடத்தலாம் என நீதிபதிகள் முடிவு செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
புலம்பெயர்ந்தோர் மீதும் தாக்குதல் நடத்த திட்டம்
தங்களை ’Barjols’ (பித்துப்பிடித்தவர்கள்) என அழைத்துக்கொள்ளும் இந்த கூட்டத்தில் 11 ஆண்களும் இரண்டு பெண்களும் இருக்கிறார்கள்.
இந்தக் குழுவினர் மேக்ரான் மீது மட்டுமின்றி, அவரது அரசிலுள்ள உறுப்பினர்கள், மசூதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
image - Photo by Etienne LAURENT / POOL / AFP