புடினுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய திட்டம்: வெளியாகியுள்ள திடுக் தகவல்
ரஷ்ய அதிபர் புடினுக்கு விஷம் கொடுத்தோ, திடீர் நோய் ஒன்றை வரவைத்தோ அல்லது தற்காலிகமாக நடந்ததுபோல் காட்டியோ அவரைக் கொன்றுவிட்டு, அவருக்கு பதிலாக வேறொருவரை ரஷ்யாவின் அதிபராக்க செல்வாக்கு மிக்க ரஷ்ய குழு ஒன்று திட்டமிட்டு வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் செல்வாக்கு மிக்க நபர்கள் கொண்ட குழு ஒன்று, புடினை பதவியிலிருந்து அகற்றவும், சொல்லப்போனால், புடினுக்கு பதிலாக வேறொருவரை நாட்டின் தலைவராக்கவும் திட்டமிட்டு வருகிறதாம்.
குறிப்பாக, மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடையால் ரஷ்ய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட உள்ளதாலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
Alexander Bortnikov என்பவரும், வேறு சில செல்வாக்கு மிக்க நபர்களும், புடினை பதவியிலிருந்து அகற்ற பல்வேறு திட்டங்கள் தீட்டி வருவதாக உக்ரைன் உளவுத்துறையின் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ரஷ்ய அதிபர் புடினுக்கு விஷம் கொடுத்தோ, திடீர் நோய் ஒன்றை வரவைத்தோ அல்லது தற்காலிகமாக நடந்ததுபோல் காட்டியோ, அவரை பதவியிலிருந்து அகற்ற திட்டம் உள்ளதாம்.
இந்த Alexander என்பவரும் முன்பு புடினுடன் ரஷ்ய உளவுத்துறையில் பணியாற்றியவர்தான். உக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைத் தொடர்ந்து தற்போது அவருக்கும் புடினுக்கும் இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாம்.