புலம்பெயர்வோரை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் திட்டம்: பிரீத்தி பட்டேலுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் பிரித்தானிய உள்துறை செயலர் பிரீத்தி பட்டேலின் திட்டத்துக்கு, அவரது அலுவலகத்திலேயே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
பிரீத்தியின் உள்துறை அலுவலகப் பணியாளர்கள், அவரது திட்டத்தை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்கள்.
பிரீத்தியின் திட்டம் முற்றிலும் தர்மத்துக்கு எதிரானது என்று கூறியுள்ள உள்துறை அலுவலகப் பணியாளர்களில் சிலர், அத்திட்டம் தொடர்பில் பணி செய்ய மறுக்க தங்களுக்கு அனுமதி கிடைக்குமா என கேட்டிருக்கிறார்கள்.
இதில் இன்னொரு விடயமும் உள்ளது. பிரித்தானியாவுக்குள் நுழைபவர்களில் யாருடைய புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளதோ, அவர்களும் கூட ருவாண்டாவில் தங்கலாமேயொழிய பிரித்தானியாவுக்குத் திரும்பி வரமுடியாது என்று கூறப்படுகிறது.
புகலிடக் கோரிக்கை மறுக்கப்படுவோரோ, அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ, அந்த நாட்டுக்கே நாடுகடத்தப்படலாம். இந்த திட்டம் குறிப்பாக பிரித்தானியாவுக்கு சட்ட விரோதமாக சிறிய படகுகள் அல்லது லொறிகளில் வரும் தனி ஆண்களையே குறிவைத்து செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
[87L3VJ ]