விபத்தை பார்வையிட அமைச்சர் பயணித்த விமானம் தீப்பற்றி எரிந்தது
சுரங்க விபத்தை பார்வையிடுவதற்காக அமைச்சர் பயணித்த விமானம் தீப்பற்றி எரிந்தது.
காங்கோ சுரங்கத்தில் 32 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் லுவாலாபா மாகாணத்தில் உள்ள கலண்டோ சுரங்கத் தளத்தில், கடந்த நவம்பர் 15 ஆம் திகதி பாலம் சரிந்து ஏற்பட்ட விபத்தில், 32 பேர் உயிரிழந்தனர்.

அங்கே பாதுகாப்பிற்கு இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு பீதியடைந்த தொழிலாளர்கள், சுரங்கத்தில் பாலம் வழியாக தப்பி செல்ல முயன்ற போது திடீர் அழுத்ததால் பாலம் சரிந்துள்ளது.
விமானத்தில் தீ
சம்பவம் நடத்த இடத்தை பார்வையிட காங்கோ சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா( Louis Watum Kabamba) மற்றும் அவரை குழுவை சேர்ந்த 19 பேர் தலைநகர் கின்ஷாசாவிலிருந்து விமானம் மூலம் லுவாலாபா மாகாணத்தின் கோல்வேசி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

கோல்வேசி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் இருந்து விலகி சென்று தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது.

அவசர கால மீட்பு குழுவினர் உடனடியாக விரைந்து, உள்ளே இருந்தவர்களை எந்த காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றி, தீயை அணைத்தனர்.
இந்த விமானமானது, அங்கோலாவின் ஏர்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டது. தரையிறக்கதில் ஏற்பட்ட தோல்வி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |