பெருவில் ஓடு பாதையில் வாகனம் மீது மோதிய விமானம்: பயணிகள் அலறல்! வீடியோ
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று, ஓடு பாதையில் நின்ற தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓடு பாதையில் விபத்து
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 102 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர்பஸ் ஏ320 என்ற உள்ளூர் பயணிகள் விமானம் புறப்பட்டது.
விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்புவதற்காக வேகமெடுத்த போது திடீரென்று அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதியது.
இந்த மோதலால் விமானத்தின் பின்புறம் தீப்பற்றியதுடன் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தால் அலற தொடங்கினர்.
?AGORA: Avião da Latam bate em caminhão durante decolagem e pega fogo no Aeroporto Internacional Jorge Chávez, no Peru.
— CHOQUEI (@choquei) November 18, 2022
pic.twitter.com/zm6hj1DY7o
விமானிகளின் பலத்த முயற்சிக்கு பிறகு தீப்பொறிகள் மற்றும் கரும்புகையை கக்கியவாறு பல அடி தூரம் முன்னேறி சென்று விமானம் நின்றது.
உயிரிழப்புகள்
விமானம் விபத்துக்குள்ளான அடுத்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர், விமானிகள் மற்றும் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இருப்பினும் விமானம் மோதிய தீயணைப்பு வாகனத்தில் இருந்த தீயணைப்பு படையை சேர்ந்த இரண்டு பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
URGENTE: Imagenes desde dentro de la cabina se puede ver el incendio de la aeronave. Momentos terribles de este accidente de LATAM en Lima, Perú. pic.twitter.com/mrgzvE7j8y
— TodoAviones (@AvionesTodo) November 18, 2022
இந்த விபத்து குறித்து விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவலில், உள்நாட்டு விமானம் ஓடு பாதையில் புறப்பட்ட போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனத்தின் மீது விபத்துக்குள்ளாகி உள்ளது, இந்த விபத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
??#PERÚ ?#URGENTE | El momento que los pasajeros salen del avión de LATAM en el Aeropuerto Internacional Jorge Chávez, en Lima. pic.twitter.com/cPU8j260Mf
— Alerta Cambio Climático (@AlertaCambio) November 19, 2022