முதலைகள் நிறைந்த சதுப்பு நிலத்தில் விபத்துக்குள்ளான குட்டி விமானம்: 36 மணிநேரம் போராடிய ஐவர்
முதலைகள் நிறைந்த சதுப்பு நிலத்தில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் 36 மணி நேரம் உயிருக்கு போராடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
முதலைகளால் சூழப்பட்ட
48 மணி நேரமாக காணாமல் போன சிறிய விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை பொலிவியாவின் அமேசானாஸ் பகுதியில் உள்ளூர் மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து நடந்த மீட்பு நடவடிக்கையில் மூன்று பெண்கள், 29 வயதான விமானி மற்றும் ஒரு குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கிய நிலையில் இருந்த அந்த விமானத்தின் மீது அவர்கள் ஐவரும் உயிருக்கு பயந்து போராடியுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அந்த சதுப்பு நிலம் முதலைகளால் சூழப்பட்டிருந்தது. மட்டுமின்றி அவர் அதிர்ஷ்டவசமாகவே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், விரல் நகம் கூட மிஞ்சாத அளவு அங்குள்ள முதலைகள் உணவாக்கியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மத்திய பொலிவியாவில் உள்ள பெனி துறையின் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போனதை அடுத்து, வியாழக்கிழமை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.
வடக்கு பொலிவியாவின் பௌரெஸிலிருந்து டிரினிடாட் நகருக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக, இட்டானோமாஸ் நதி அருகே அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமானி உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஐந்து பேரும்
விமானம் திடீரென உயரத்தை இழக்கத் தொடங்கியதை அடுத்து அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் விமானத்தை தரையிறக்கும் முடிவை எடுத்ததாக விமானி குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தில் இருந்த ஐந்து பேரும் விமானத்தின் மேல் நெருக்கமாக நின்றதாகவும், அவர்களிடமிருந்து மூன்று மீற்றருக்குள் முதலைகளால் சூழப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விமானத்தில் இருந்து பெட்ரோல் கசிந்த நிலையில் இருந்ததால் முதலைகள் தங்களை நெருங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர்கள் தண்ணீரில் ஒரு அனகோண்டாவையும் கண்டார்கள்.
விபத்தில் சிக்கியுள்ள விமானத்தை மீனவர்கள் கண்ட பிறகு, தகவல் தெரிவிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ஐவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒரு ஹெலிகொப்டர் வரவழைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |