2000 அடி உயரத்தில் பறந்த விமானம்: தரையில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
விழுந்து நொறுங்கிய விமானம்
அமெரிக்காவின் பிரபல கார் பந்தய வீரரான 55 வயது கிரெக் பிபிள், செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் பயணம் செய்துள்ளார்.
இவர்களுடன் டென்னிஸ் டட்டன் மற்றும் அவரது மகன் ஜாக், கிரெக் வாட்ஸ்வொர்த் ஆகியோரும் பயணம் செய்துள்ளனர்.

ஸ்டேட்ஸ்வில்லி இருந்து புளோரிடா நோக்கி புறப்பட்ட விமானம் 2000 அடி உயரத்தை அடைந்த போது ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்பியது.
விமான கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்க முயற்சி செய்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயை தாண்டி சென்று சுற்றுச்சுவர் மற்றும் ஆண்டனா மீது மோதி வெடித்தது.

7 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாட்டை இழந்து விமானம் சுற்றுச் சுவரில் மோதி வெடித்ததில் விமானத்தில் பயணித்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |