அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானம்: உடைந்த கழுத்துடன் உயிர் பிழைத்த 17 வயது சிறுமி!
விமான விபத்தில் சிக்கிய 17 வயது சிறுமி அமேசான் மழைக்காடுகளில் தனியாக உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம்
கடந்த 1972 ம் ஆண்டு டிசம்பர் மாதம் LANSA Flight 508 என்ற விமானம் மின்னல் தாக்குதலுக்கு பிறகு பெருவில் உள்ள அமேசான் காடுகளில் மோதி விபத்திற்குள்ளானது.
விமானத்தில் மொத்தம் 92 பேர் வரை பயணித்த நிலையில், ஜூலியான் கோப்கே (Juliane Koepcke) என்ற 17 வயது சிறுமி மட்டுமே உயிர் பிழைத்தார்.
Wings of Hope/Youtube
தனியாக உயிர் பிழைத்த சிறுமி
விமான விபத்தின் போது 2 மைல் தொலைவில் தரையில் விழுந்த 17 வயது சிறுமி பல வாரங்களாக அமேசான் காடுகளில் தனியாக சுற்றித் திரிந்து உயிர் பிழைத்துள்ளார்.
உடைந்த கழுத்து எலும்பு, வலது கையில் ஆழமான காயம், கண் காயம் மற்றும் மூளையதிர்ச்சி ஆகியவை இருந்தபோதிலும், அடர்ந்த காட்டுக்குள் 10 நாட்கள் அவரால் மலையேறி உள்ளூர் குடிசை ஒன்றில் தஞ்சமடைய முடிந்துள்ளது.
இதற்கிடையே 17 வயது சிறுமி ஜூலியான் கொசுக்களையும், பசியையும் எதிர்த்து போராட வேண்டியிருந்தது.
wikipedia
ஜூலியான் விமான விபத்தின் போது இருக்கையில் சீட் பெல்ட் அணிந்து இருந்ததுடன், ஓரளவு கவசமும் மொத்தையும் அணிந்திருந்ததாக சொல்லபடுகிறது.
இந்நிலையில் ஜூலியனின் வியக்க வைக்கும் உயிர்வாழ்வுக் கதை அந்த நேரத்தில் பல ஊகங்களுக்கு வழிவகுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Wings of Hope/Youtube