இல்லினாய்ஸ் விமான விபத்து: நான்கு பேர் பலி! விசாரணை தீவிரம்
மத்திய இல்லினாய்ஸில் நேர்ந்த கோர விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இல்லினாய்ஸ் விமான விபத்து
சனிக்கிழமை காலை இல்லினாய்ஸ்(Illinois) மாகாணத்தின் ட்ரில்லா அருகே வயல்வெளியில் ஏற்பட்ட பயங்கரமான சிறிய ரக விமான விபத்தில், விமானத்தில் பயணித்த நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த துயரச் செய்தியை தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மின்னஞ்சல் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
விசாரணையில், செஸ்னா சி180ஜி ரக விமானம்(Cessna C180G aircraft) காலை 10:00 மணிக்கு சற்று பிந்தியே கீழே விழுந்ததாக NTSB தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விமானம் மின்சாரக் கம்பிகளில் மோதியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய இல்லினாய்ஸில் அமைந்திருக்கும் ட்ரில்லா கிராமம் தற்போது இந்த விபத்திற்கான காரணங்களை கண்டறியும் தீவிர விசாரணையின் மையமாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |