தீயணைப்பு வாகனத்துடன் மோதி விமானம் விபத்து: 2 இருவர் பலி., வெளியான பரபரப்பான காட்சிகள்
பெரு நாட்டின் ஓடுபாதையில் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
ஓடுபாதையில் விமானம் விபத்து
பெருவின் தலைநகரான லிமாவில் உள்ள விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை ஒரு LATAM ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் இருந்த ஒரு தீயணைப்பு வாகனத்துடன் மோதியதில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்தனர்.
மேலும், 20 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குறைந்தது இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பெருவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திட்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விபத்து நடந்தபோது பதிவான பரபரப்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
? #ÚLTIMAHORA | Un avión A320 de la aerolínea LATAM sufrió un grave accidente en el Aeropuerto Jorge Chávez de Lima (Peru) tras colisionar con un camión de bomberos https://t.co/soLz1sVeZh pic.twitter.com/hV2IuVhcP8
— Webinfomil.com (@Webinfomil) November 18, 2022
விசாரணை
இதனிடையே, ஜார்ஜ் சாவேஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 61 பேர் அருகிலுள்ள கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது காயம் காரணமா அல்லது முன்னெச்சரிக்கை காரணமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ ட்விட்டரில் ஒரு அறிக்கையில் இரண்டு தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார், காயமடைந்தவர்கள் மீட்க பிரார்த்தனை செய்வதாக கூறினார்.
#LATAM #airplanecrash update. Looks like the Lima Airport tower failed to control the traffic on the runway. Fire truck and airplane on runway. pic.twitter.com/FQOVo3mE6T
— Dore (@Sharkpatrol32) November 18, 2022
விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் தீயணைப்பு வாகனம் ஏன் நுழைந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.