மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானம்! விமானிக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலராடோ மலையில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது, சனிக்கிழமை இரவு Wigwam Creek Trail அருகே விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
சம்பவயிடத்திற்கு விரைந்த குழுவினர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஞாயிறு மதியம் விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தனர் மற்றும் அதில் பயணித்த விமானி சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விபத்து குறித்து அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் மேற்பார்வையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
