நடுவானில் கோளாறான இன்ஜின்... ஆஸ்திரேலியா கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்!
ஆஸ்திரேலியாவில் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
perth நகரில் உள்ள கடலிலே விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நடுவானில் சிறிய ரக விமானம் பறந்துக்கொண்டிருந்த போது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து விமானியால் விமானத்தை கட்டுப்படுத்த முடியாததால் அது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானம் கடலில் விழுந்த பிறகு அதில் பயணித்த விமானி மற்றும் பயணி ஆகிய இருவரும் சாமர்த்தியமாக வெளியேறி, நீந்தியபடி பத்திரமாக கரைசேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருவருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Scenes over in Perth. Plane has crashed into the ocean at City Beach - I’m told due to engine failure. No one believed to be injured pic.twitter.com/7Yt57TKCuf
— Sam McManus (@SamFMcManus) November 13, 2021
விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானத்தை கரையில் இருந்த நூற்றுக்கணக்கானோர் நேரில் பார்த்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து, பல பொலிஸ் வீரர்கள், அவரசர உதவி குழுவினர், மீட்பு படையினர், பொலிஸ் ஹெலிகாப்டர் சம்பவத்திற்கு விரைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.