புறப்பட்ட சிறிது நேரத்திலே முன் பகுதி முழுவதும் ரத்த கரையுடன் தரையிறங்கிய விமானம்! நடுவானில் நடந்த சம்பவம்
துருக்கியில் சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலே ரத்த கரையுடன் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துருக்கி சரக்கு விமானமான TK-6220 இஸ்தான்புல் அடாடர்க் விமான நிலையத்திலிருந்து கஜகஸ்தானின் Almaty நகரத்திற்கு புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவைகள் கூட்டமாக மோதியுள்ளது, இதில் விமானம் சிக்கி சேதமடைந்தது.
விமானம் சேதமடைந்தததை அடுத்து விமானி, அடாடர்க் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, விமானம் அடாடர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
Turkish Airlines Cargo 777 damaged following multiple bird strikes on departure from Istanbul. https://t.co/L8YJWVlXlu pic.twitter.com/W0k4r5vXFn
— Breaking Aviation News & Videos (@breakingavnews) January 3, 2021