அமெரிக்காவில் புறப்படும்போது வெடித்த விமானம்! பலரது நிலை என்ன?
அமெரிக்காவின் லூயிஸ்வில் விமான நிலையத்தில் விமானம் ஒன்று வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரும்புகை மூட்டம்
கென்டக்கியின் லூயிஸ்வில் விமான நிலையத்தில் The MD-11 என்ற விமானம், ஹொனலுலுவில் உள்ள டேனியல் கே இனூயே சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டது. 
ஆனால், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்ததில் கரும்புகை மூட்டம் கிளம்பியது.
அந்த நேரத்தில் அதில் மூன்று பணியாளர்கள் இருந்ததாக UPS அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விமான நிலையமும் தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் புதன்கிழமை திட்டமிடப்பட்ட விமானங்களில் நாடு முழுவதும் பயணக்குழப்பம் தொடர்வதால், தங்கள் விமான நிலைய சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கென்டக்கி ஆளுநர் ஆண்டி பெஷியர், துயர சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விமானிகள் மற்றும் பணியாளர்கள், பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |