78 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: அம்பலமாகும் அதிர்ச்சி பின்னணி
இஸ்ரேலில் இருந்து ரஷ்யா சென்ற பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது.
உலக நாடுகளை மொத்தமாக உலுக்கிய செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கோர சம்பவம் அரங்கேறியது.
Tupolev Tu-154 என்ற பயணிகள் விமானமானது 66 பயணிகள் உட்பட 78 பேர்களுடன் ரஷ்யாவின் Novosibirsk நகருக்கு பயணித்துள்ளது. இந்த நிலையில் உக்ரேனிய ஏவுகணையால் குறித்த விமானமானது சுட்டு வீழ்த்தப்பட்டது.
தொடக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யாவுக்கு எந்த பங்கும் இல்லை எனவும், இது தீவிரவாதிகளின் செயல் எனவும் ரஷ்யா தெரிவித்திருந்தது. மேலும், ராணுவம் முன்னெடுத்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட S-200 ஏவுகணையானது Tupolev Tu-154 என்ற பயணிகள் விமானம் செல்லும் பாதையை எட்ட வாய்ப்பில்லை எனவும் அப்போது ரஷ்ய ஜனாதிபதி புடின் அழுத்தமாக தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, இயந்திர கோளாறு காரணமாகவே, குறித்த பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாகவும் அப்போது தகவல் வெளியானது. இந்த நிலையில், 2001 அக்டோபர் 4ம் திகதி நடந்த குறித்த விமான விபத்து தொடர்பில் தற்போது நிபுணர்கள் இறுதி முடிவுக்கு எட்டியுள்ளனர்.
அதில் குறித்த பயணிகள் விமானமானது ரஷ்ய ட்ரோன் விமானத்தில் இருந்தே இரண்டு ஏவுகணை வீசப்பட்டதாக உறுதி செய்துள்ளனர். இதில் Tupolev Tu-154 என்ற பயணிகள் விமானம் 78 பேர்களுடன் வெடித்துச் சிதறியுள்ளது.
மேலும், விமான பாகங்கள் ரஷ்ய நகரமான சோச்சிக்கு 115 மைல் தெற்கே கருங்கடலில் விழுந்துள்ளது.
உண்மையில் 1812 என்ற விமானத்திற்கே குறிவைக்கப்பட்டதாகவும், ஆனால் Tupolev Tu-154 என்ற பயணிகள் விமானம் சிக்கியதாகவும் முன்னாள் தளபதி ஒருவர் உறுதி செய்துள்ளார்.