109 பேருடன் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு! பயணிகளின் நிலை என்ன? வெளியான வீடியோ
ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yakutia ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான 737 விமானம் Yakutia-விலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு பயணித்துள்ளது.
மாஸ்கோவில் உள்ள Vnukovo விமான நிலையத்தில் விமானம் தரையிங்கிய போது ஓடுபாதையிலிருந்து விலகி ஓடி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் 109 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், சேதம் ஏதும் ஏற்படவில்லை என மாஸ்கோ அவசர உதவுக்கு குழு தகவல் தெரிவித்துள்ளது.
பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து பத்திரமாக இறங்கினர், விபத்தை தொடர்ந்து விமான நிலையம் மூடப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yakutia Airlines 737 overruns runway after landing at Moscow's Vnukovo Airport, Russia. No injuries or aircraft damage reported. https://t.co/YXhG2EUcPu pic.twitter.com/ch3o0lF0lx
— Breaking Aviation News & Videos (@breakingavnews) December 25, 2020