இலங்கைக்கு பயணப்பட்ட விமானம் ஈரானில் தரையிறக்கப்பட்ட மர்மம்: வெளிவரும் புதிய தகவல்
லிதுவேனியா நாட்டில் இருந்து இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு புறப்பட்ட இரு விமானங்கள் மர்மமான முறையில் ஈரானில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஈரான் எல்லைக்குள்
அந்த இரு விமானங்களும் மர்மமான முறையில் திருப்பி விடப்பட்டதாகவும், பின்னர் ஈரானில் தரையிறங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஒரு விமானம் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது, இன்னொன்று சபஹர் கொனாரக் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த இரு விமானங்களும் ரடார் கண்காணிப்பில் இருந்து வந்தாலும், ஈரான் எல்லைக்குள் நுழைந்ததும் மர்மமாக ரடார் கண்காணிப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமானங்கள் இரண்டும் காம்பியன் குத்தகை நிறுவனமான மக்கா இன்வெஸ்ட் நிறுவனத்தைச் சேர்ந்தது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் அந்த இரு விமானங்களையும் கடத்தியதாகவே லிதுவேனியாவின் ஊடகங்களில் வியாழக்கிழமை செய்தி வெளியாகியுள்ளது. பொருளாதார கட்டுப்பாடுகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ளதால், தற்போது புதிதாக விமானம் வாங்கும் நிலையில் ஈரான் இல்லை.
550 விமானங்களின் பற்றாக்குறை
இதனாலையே, அந்த இரு விமானங்களையும் ஈரான் கடத்தியதாக கூறுகின்றனர். இந்த சம்பவம் தற்போது லிதுவேனியா அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. 2022 டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து உஸ்பெகிஸ்தான் புறப்பட்ட விமானம் ஒன்று, பாதை மாறி ஈரானில் தரையிறங்கியது.
2022ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், ஈரானுக்கு குறைந்தபடசம் 550 விமானங்களின் பற்றாக்குறை இருப்பதாக தெஹ்ரான் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |