பழுதாகி ரயில் பாதையில் இறங்கிய விமானம்... மோதி தூக்கியெறிந்த ரயில்: ஒரு திகில் வீடியோ
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று பழுதாகி ரயில் பாதையில் இறங்க, வேகமாக வந்த ரயில் ஒன்று அதன் மீது மோதி, அதைத் தூக்கியெறியும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
நேற்று மதியம், லாஸ் ஏஞ்சல்ஸில் சிறிய ரக விமானம் ஒன்று பழுதாகி, சரியாக ரயில் பாதை ஒன்றில் இறங்கியுள்ளது.
அது இறங்கி தரையில் மோதிய வேகத்தில் அதன் பைலட் காயமடைந்திருக்கிறார். தகவலறிந்து வந்த பொலிசார், உடைந்த விமானத்துக்குள் சிக்கியிருந்த பைலட்டை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.
வேக வேகமாக அவர்கள் அவரை வெளியேற்ற முயல, அதற்குள் ஹாரன் ஒலித்தபடி வேகமாக ரயில் வந்திருக்கிறது. ஒரு வழியாக பைலட்டை விடுவித்த பொலிசார், காயமடைந்ததால் அவரால் நடக்க இயலாத நிலையில், தரதரவென அவரை இழுத்துக்கொண்டே வந்திருக்கிறார்கள்.
அவர்கள் அவரை விமானத்திலிருந்து வெளியேற்றிய சில விநாடிகளில், வேகமாக வந்த ரயில் விமானத்தின் மீது மோதியுள்ளது.
நல்ல வேளையாக விமானத்தில் அந்த பைலட் மட்டுமே இருந்திருக்கிறார், வேறு யாரும் அவருடன் இல்லை.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை எப்படி இருக்கிறது, அந்த விமானம் எப்படி ரயில் பாதையில் இறங்கியது என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.





 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        