541 மில்லியன் கால மர்மம் உடைந்தது! இதுதான் பூமியின் முதல் விலங்கு
பூமியின் ஆரம்பகால விலங்குகளில் ஒன்றாக கடற்பாசிகள்தான் இருந்ததாக புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
பழங்கால பாறை மாதிரிகளில்
Proceedings of the National Academy of Sciences இதழில் ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, பூமியில் சிக்கலான உயிர்கள் தோன்றுவதற்கு சில 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய விலங்கு கடற்பாசிகள் என்று தெரிய வந்துள்ளது.
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவானது. எளிமையான நுண்ணுயிர் வாழ்க்கை சுமார் 4.3 பில்லியன் முதல் 3.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம்.
ஆனால், விலங்குகள் தோன்றுவதற்கு அதிக காலம் ஆனது. பெரும்பாலான பல செல் உயிரினங்கள் தோன்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன், 541 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கடற்பாசிகள் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதன்மூலம் உயிரியலின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றுக்கு விடை கிடைத்துள்ளது. அதாவது 'வேதியியல் புதைபடிவங்களை' விஞ்ஞானிகள் பழங்கால பாறை மாதிரிகளில் கண்டுபிடித்துள்ளனர்.
இவை சிக்கலான உயிரினங்களின் செல் சவ்வுகளில் காணப்படும் நிலையான ஸ்டெரால் வகையைச் சேர்ந்த 30-carbon steranes ஆகும். டெமோஸ்பாஞ்சஸ் எனப்படும் ஒருவகை கடற்பாசிகளுடன் இவை நெருங்கிய தொடர்புடையவை ஆகும்.
எனவே ஆரம்பகால விலங்கு வாழ்க்கையின் மூலக்கூறு தடயங்களை கடற்பாசிகள் விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பார்ப்பதற்கு தாவரங்களைப் போல இருந்தாலும் விலங்குகள் என்று இந்த கடற்பாசிகள் வகைப்படுத்தப்படுகின்றன.
அத்தியாவசியத் தகுதிகள்
இந்த கடற்பாசிகள் உணவு உண்ணும், இனப்பெருக்கம் செய்யும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிர்வினையாற்றும் பல யூகேரியோடிக் செல்களைக் கொண்டுள்ளன.
அவற்றுக்கு செல் சுவர்கள், சிக்கலான உறுப்புகள் இல்லாவிட்டாலும், அவை விலங்குகளுக்கான அத்தியாவசியத் தகுதிகளைப் பூர்த்தி செய்கின்றன.
அவற்றின் இந்த எளிமை, விலங்குகளின் பரிணாம வளர்ச்சி எவ்வாறு தொடங்கியது என்பதை புரிந்துகொள்வதற்கு மிக முக்கியமானது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விஞ்ஞானிகள் கடற்பாசிகளில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களால் குறியிடப்பட்ட ஒரு என்சைமைப் பயன்படுத்தி, ஆய்வகத்தில் 30-கார்பன் ஸ்டெராலை உருவாக்கினர்.
இதன்மூலம் அந்த மூலக்கூறுகள் ஆரம்பகால விலங்குகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்த ஆய்வு மூலம், பூமியின் ஆரம்பகால விலங்குகள் எளிமையான கடற்பாசிகளாக இருந்தன என்பதற்கு வலுவான அறிகுறிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |