தாயாரை கொன்று உடலை வெட்டி நொறுக்கிய மகன்: ஒரு வாரமாக திட்டமிட்டது அம்பலம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சொந்த தாயாரை கொன்று சடலத்தை வெட்டி நொறுக்கி கூடைக்குள் பத்திரப்படுத்திய சம்பவத்தில் ஒருவர் கைதாகியுள்ளார்.
ஹூஸ்டன் நகரில் வசித்துவரும் 36 வயதான ராபர்ட் பார்ன்ஸ் என்பவரே தமது தாயாரை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
72 வயதான லூசிலா பார்ன்ஸ் என்பவரை பலமுறை துப்பாக்கியால் சுட்டு, பின்னர் அவரது உடலை பல துண்டுகளாக வெட்டி, கூடைக்குள் அடைத்து பாதுகாத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்ததன் அடுத்த நாள் ராபர்ட் பார்ன்ஸின் சகோதரி ஒருவர் குடியிருப்புக்கு சென்ற நிலையில், அவரை ராபர்ட் துப்பாக்கியை காட்டி மிரட்டி துரத்தியுள்ளார்.
இந்த நிலையில் புதன்கிழமை லூசிலா தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என்பதை அறிந்த உறவினர்கள் நெரிடையாக சென்று விசாரித்துள்ளனர். ஆனால் வியாழக்கிமை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விசாரணைக்காக சென்றுள்ளனர்.
உரிய நீதிமன்ற உத்தரவின்றி பொலிசாரை குடியிருப்பினுல் அனுமதிக்க முடியாது என ராபர்ட் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து உரிய அனுமதி பெற்று வந்த பொலிசார், அந்த குடியிருப்புக்குள் கண்ட காட்சி நடுங்க வைத்துள்ளது.
லூசிலாவின் சடலம் ஒரு கூடைக்குள் அடைக்கப்பட்டு, கார் நிறுத்தும் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு முன்னரே கூடை ஒன்றை ராபர்ட் தயார் செய்துள்ளதும், கொலை நடப்பதற்கும் ஒருவாரம் முன்னர் திட்டமிட்டதும் ஒப்புதல் வாக்குமூலத்தில் பொலிசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை கொலைக்கான காரணம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனால் ராபர்ட் மீது வழக்கு ஏதும் பதியவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.