கோகா-கோலாவில் பிளாஸ்டிக் கலப்பு., 10,000 கேன்கள் திரும்பப்பெற நடவடிக்கை
கோகா-கோலாவில் பிளாஸ்டிக் கலப்படமானதால் 10,000 கேன்கள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கோகா-கோலா (Coca-Cola) பானங்களில் பிளாஸ்டிக் கலப்பு ஏற்பட்டுள்ளது என்பதால், 10,000-க்கும் அதிகமான கேன்களை திரும்ப பெறப்பட்டுள்ளன.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து முகமை (FDA) மார்ச் 6, 2025 அன்று இந்த திரும்பப்பெறும் நடவடிக்கையை அறிவித்தது.
மார்ச் 24, 2025 அன்று, இது “Class II Recall” என வகைப்படுத்தப்பட்டது.
FDA வகைப்படுத்தல் - Class II Recall என்றால் என்ன?
FDA-வின் தரப்படுத்தலில் Class II Recall என்பது:
பயனர்கள் இந்தப் பொருளைப் பயன்படுத்தும்போது தற்காலிகமான அல்லது மருத்துவ ரீதியாக தீர்க்கக்கூடிய பாதிப்புகள் ஏற்படலாம்.
பெரும் சுகாதார பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு.
இதுவரை, இந்தப் பிரச்சினையால் யாரும் காயமடையவில்லை அல்லது உடல்நலக் குறைவு அடையவில்லை என்று FDA தகவல் அளித்துள்ளது.
எந்த மாநிலங்களில் கோகா-கோலா திரும்பப் பெறப்பட்டது?
FDA வெளியிட்ட தகவலின்படி, இந்த கோகா-கோலா பானங்கள் இல்லினாய்ஸ் (Illinois) மற்றும் விஸ்கான்சின் (Wisconsin) ஆகிய இரு மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டது.
இதை Reyes Coca-Cola Bottling, LLC நிறுவனம் மில்வாக்கி (Milwaukee) நகரில் உற்பத்தி செய்து விநியோகித்தது.
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்
Reyes Coca-Cola Bottling நிறுவனம் USA Today ஊடகத்திற்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“உயர் தரத்திற்கேற்ப தயாரிக்கப்படாததால், 12-பேக் கோகா-கோலா கிளாசிக் 12-அவுன்ஸ் (12 Fl Oz) கேன்கள் Illinois மற்றும் Wisconsin மாநிலங்களில் இருந்து திரும்ப பெறப்படுகின்றன.”
“நாங்கள் சிறந்த தரமான பானங்களை வழங்குவதே எங்கள் முதன்மையான இலக்கு. எனவே, இந்த தன்னார்வத் திரும்ப பெறும் நடவடிக்கையை எடுக்கிறோம்.”
இந்த சம்பவம் கோகா-கோலா நிறுவனத்திற்கு பாரிய சவாலாக மாறியுள்ளது. FDA மற்றும் வாடிக்கையாளர்கள் இதற்கான விசாரணை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |