பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முடிவு.., ஆபத்து கட்டத்தை தாண்டியதாக தகவல்
பிரபல பின்னணி பாடகி கல்பனா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபரீத முடிவு
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பின்னணி பாடகி கல்பனா வசித்து வந்துள்ளார்.
இவரது வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை.
பின்னர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கதவை உடைத்த பொலிஸார் சுயநினைவற்ற நிலையில் இருந்த கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார் என்று கூறினர்.
இந்நிலையில் தற்போது அவர் ஆபத்து கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |