ரொனால்டோ உடன் விளையாடி இருக்கிறேன்... இப்போது விமான ஊழியர்: மனம் திறந்த பிரபலம்
போர்த்துகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோவுடன் இணைந்து உலக நாடுகளில் கால்பந்து விளையாடியுள்ள கோஸ்டின்ஹா தமது புதிய வேலை மற்றும் கனவு தொடர்பில் மனம் திறந்துள்ளார்.
கடந்த 2001 பிப்ரவரி மாதம் கோஸ்டின்ஹா மற்றும் ரொனால்டோ இருவரும் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போர்த்துகல் அணியில் முதன்முறையாக களமிறங்கியுள்ளனர்.
@getty
தென்னாப்பிரிக்கா அணியுடனான அந்த முதல் ஆட்டத்திலேயே ரொனால்டோ தமது முதல் கோலை பதிவு செய்துள்ளார். அத்துடன் தென்னாப்பிரிக்கா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வென்றது.
ஆனால் காலப்போக்கில் ரொனால்டோ பல சாதனைகள் புரிந்து நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர, கோஸ்டின்ஹா விமான ஊழியராக உலகை வலம் வந்துள்ளார்.
@getty
தமது 25ம் வயதில் கால்பந்து களத்தில் தமது தேவை இல்லை என்பதை முடிவு செய்துள்ளார் கோஸ்டின்ஹா.
கால்பந்து களத்தில் இருந்து வெளியேறினாலும், ரொனால்டோவுடன் ஒரே அணியில் விளையாடியதை தற்போதும் பெருமையாக கருதுகிறார் கோஸ்டின்ஹா.