சிறை மீது ட்ரோன் தாக்குதல் அச்சம்: இம்ரான் கானை விடுதலை செய்ய மனுதாக்கல்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள், அவரை விடுதலை செய்ய நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம்
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் உள்ளார்.
அவரை விடுவிக்க வெள்ளிக்கிழமையன்று மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கான் இருக்கும் சிறை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியதாக செய்தி ஒன்று கூறுகிறது.
பிணையில் விடுவிக்க
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், "இந்தியாவுடனான தற்போதைய போர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காகவும், அடியாலா சிறையில் ட்ரோன் தாக்குதல் குறித்த அச்சம் காரணமாகவும், அவரை உடனடியாக பிணையில்/நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்குமாறு கோரப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் எந்த திகதியையும் நிர்ணயிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |