ஐரோப்பிய நாடொன்றின் பிரதமருக்கு எதிராக ட்ரோன் தாக்குதல் திட்டம்: வெளிவரும் பின்னணி
பெல்ஜியத்தின் பிரதமர் Bart de Wever உட்பட அரசியல்வாதிகள் பல மீது ட்ரோன் தாக்குதலுக்கு ஒரு குழு திட்டமிட்ட நிலையில், அது முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடும் அதிர்ச்சி
குறித்த தகவலை துணைப் பிரதமர் மாக்சிம் பிரீவோட் மற்றும் அரசு சட்டத்தரணி அலுவலகமும் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. சமூக ஊடக பக்கத்தில் பிரீவோட் தெரிவிக்கையில்,
பிரதமர் மீது ட்ரோன் தாக்குதல் திட்டம் என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விவகாரம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், நாம் ஒரு உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம் என்பதையும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றார்.
கடந்த பத்தாண்டுகளில், இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களையும், போதைப்பொருள் கும்பல்களால் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மையையும் பெல்ஜியம் எதிர்கொண்டு வந்துள்ளது.
இருவரிடம் விசாரணை
இந்த நிலையில், பொலிசாரின் துரித நடவடிக்கைகளே ட்ரோன் தாக்குதலை முறியடித்துள்ளதாக பெல்ஜியத்தின் நீதித்துறை அமைச்சர் அன்னெலிஸ் வெர்லிண்டன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் கைதாகியுள்ள இருவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு சட்டத்தரணி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், அரசியல்வாதிகளை குறிவைத்து ஜிஹாதிகளால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நடத்துவதே நோக்கம் என்பதற்கான அறிகுறிகளும் இருப்பதாக அரசு சட்டத்தரணி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேக நபர்களின் குடியிருப்புகளில் நடந்த சோதனையின் போது ஆபத்தான மேம்படுத்தப்பட்ட கருவிகள், ஒரு பை எஃகு பந்துகள் மற்றும் அந்தக் குழு தங்கள் தாக்குதலின் ஒரு பகுதியாக ட்ரோனைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |