இலக்கு 3,000 பெண்கள்... இளைஞரின் கொடூர திட்டம்: வெளிவரும் பகீர் பின்னணி
பெண்களை கொல்ல திட்டமிட்ட குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்வதாக நீதித்துறை
பொறாமை, வெறுப்பு மற்றும் பழிவாங்குவதற்காகவே 3,000 படுகொலைகளுக்கு திட்டமிட்டுள்ளதாக Tres Genco
திருமணத்தில் வெறுப்புகொண்ட இளைஞர் ஒருவர் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் மாணவிகளை கொல்ல திட்டமிட்ட விவகாரத்தில் தற்போது பெடரல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
22 வயதேயான Tres Genco என்ற இளைஞருக்கு பெண்கள் மீது வெறுப்பு மட்டுமின்றி, திருமணத்திற்கும் எதிராக பேசி வந்துள்ளார். இந்த நிலையில் பெண்களை கொல்ல திட்டமிட்ட குற்றத்திற்காக அவர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்வதாக நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2020ல் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் மாணவிகளை கண்காணித்து கட்டுரை ஒன்றை தயாரித்த Tres Genco, அதில் குறிப்பிட்டுள்ள பெண்களை கொல்லவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், 2020 மார்ச் மாதம் Tres Genco தங்கியிருந்த குடியிருப்பை சோதனைக்கு உட்படுத்திய பொலிசார் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். தொடர்ந்து 2021 ஜூலை மாதம் Tres Genco மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், Tres Genco தயாரித்துள்ள குறிப்பில், 2014ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாதர்சங்க அலுவலகத்திற்கு வெளியே பெண்கள் மீது தாக்குதல் நடத்திய Elliot Rodger தொடர்பில் பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த சம்பவத்தில் 6 பெண்கள் கொல்லப்பட்டதுடன், 14 பேர் காயங்களுடன் தப்பினர். மேலும், பொறாமை, வெறுப்பு மற்றும் பழிவாங்குவதற்காகவே 3,000 படுகொலைகளுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் Tres Genco கூறியுள்ளார். மட்டுமின்றி, 2019ல் இருந்தே இதற்கான தயாரிப்பில் அவர் தீவிரம் காட்டிவந்ததாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
@police file