பிரான்சில் நடந்த பயங்கர சம்பவம்! தவறான தகவலை பரப்ப வேண்டாம் என கோரிக்கை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல் நிலையத்திற்கு வெளியே பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பான எந்த வித உறுதிப்படுத்தாத தகவல்களையும் பகிர வேண்டாம் என தேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம். வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும், அதிகாரபூர்வ கணக்குகளை பின்தொடரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை இத்தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விசாரணைகளை ஆரம்பிக்கவில்லை. இந்த வழக்கை எடுத்துக்கொள்வதாகவும் அறிவிக்கப்படவில்லை.
பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் சம்பவத்தினை ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய நபர், அல்லா ஹூ அக்பர் என கோஷம் எழுப்பியது உறுதிப்படுத்தப்பட்டபோதும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.