பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டி 5 வயது சிறுமியும் பலி! நடந்தது என்ன? வெளிவரும் தகவல்
பிரித்தானியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து வயது குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் Plymouth பகுதியில் நேற்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐந்து வயது குழந்தையும் உயிரிழந்திருப்பதாகவும், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரின் பெயர் Jake Davison என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
23 வயது மதிக்கத்தக் இந்த நபர் அங்கு கிரேன் ஆப்ரேட்டராக வேலை செய்து வருவதாகவும், இவர் தெருவில் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு, தனது சொந்த குடும்பத்தில் இருப்பவர்களை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், அது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. துப்பாக்கி சூட்டின் போது, அந்த நபர் கறுப்பு மற்றும் சாம்பநிற உடை அணிந்துள்ளார். இது Plymouth-ன் Keyham பகுதியில் நடந்துள்ளதாக கூறுகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, அந்த நபர் அங்கிருக்கும் பூங்காவிற்கு தப்பி ஓடியதாகவும், அப்போது பூங்காவில் இருந்தவர்களை நோக்கியும் துப்பாக்கி சூட்டை நடத்தியதாகவும், அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அவர் குடும்பத்தினரா? அல்லது வேறு யாருமா என்பது முழு விசாரணைகு பின்னரே தெரியவரும்.
மேலும், இது போன்ற ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூடு சம்பவம், பிரித்தானியாவில் 11 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.