உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியா விரைவாகச் செயல்பட்டிருக்கலாம்! ஒப்புக்கொண்ட பிரதமர் போரிஸ்
ரஷ்யாவுடனான போரில் இருந்து தப்பியோடி வரும் உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியா விரைவாகச் செயல்பட்டிருக்கலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒப்புக்கொண்டார்.
உக்ரைனில் நிலைமை குறித்து பேசிய போரிஸ் ஜான்சன், உக்ரேனிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாங்கள் ஒரு பெரிய உதவ செய்துள்ளோம்.
ஆனால் இப்போது அதிக எண்ணிக்கையிலானவர்கள் பிரித்தானியாவிற்கு வருகிறார்கள்.
இதுவரை 86,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன, மேலும் 27,000 ஏற்கனவே பிரித்தானியா வந்துள்ளனர்.
பிரித்தானியா வரும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து து வருகிறது, உக்ரேனியர்களுக்கு உதவும் அனைவருக்கும் நான் மரியாதை செலுத்த விரும்புகிறேன்.
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை தவுடுபொடியாக்கிய உக்ரைன்! வீடியோ ஆதாரம்
உக்ரேனியர்களுக்கு உதவுதில் பிரித்தானியா விரைவாகச் செயல்பட்டிருக்கலாம் என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒப்புக்கொண்டார்.