ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை தவுடுபொடியாக்கிய உக்ரைன்! வீடியோ ஆதாரம்
ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் ட்ரோன் தாக்கி அழித்த காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் ஸ்னேக் தீவில் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்னேக் தீவில் அமைக்கப்பட்டிருந்த ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை, உக்ரைன் ட்ரோன் தாக்கி அழித்துள்ளன.
வீடியோவில், தரையில் இருக்கும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைக்கும் ட்ரோன் அதன் மீது குண்டை வீசுகிறது. இதனையடுத்து குண்டு தாக்கி அந்த அமைப்பு வெடித்துச் சிதறுகிறது.
TB2 பைரக்டர் ட்ரோன் மூலம் ரஷ்ய பாதுகாப்பு அமைப்பை உக்ரைன் தாக்கி அழித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நேற்று இதே ஸ்னேக் தீவில் ரஷ்ய ரோந்து படகுகளை TB2 பைரக்டர் ட்ரோன் மூலம் உக்ரைன் தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய படகுகளை தவிடுபொடியாக்கிய உக்ரைன் ட்ரோன்! வீடியோ ஆதாரம்
A #Bayraktar drone hunts for the #Russian air defense system on #SnakeIsland. pic.twitter.com/0hMXTFsT0f
— NEXTA (@nexta_tv) May 3, 2022
சில தினங்களுக்கு முன் கருங்கடலில் ரஷ்யா முக்கிய போர்க்கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணை மூலம் உக்ரைன் தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.