ரஷ்ய படகுகளை தவிடுபொடியாக்கிய உக்ரைன் ட்ரோன்! வீடியோ ஆதாரம்
ரஷ்ய படகுகளை உக்ரைன் ட்ரோன் தாக்கி அழித்த காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் ஸ்னேக் தீவுக்கு அருகே நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்னேக் தீவுக்கு அருகே ரோந்தி பணியில் ஈடுபட்ட இரண்டு ரஷ்ய ராப்டர் படகுகளை, உக்ரைன் ட்ரோன் தாக்கி அழித்துள்ளன.
வீடியோவில், கடலில் இருக்கும் ரஷ்ய படகை குறிவைக்கும் ட்ரோன் அதன் மீது குண்டை வீசுகிறது. குண்டு படகு மீது தாக்கியதில் படகு வெடித்துச் சிதறுகிறது.
அதேபோல் வேகமாக செல்லும் மற்றொரு படகையும் ட்ரோன் தாக்கி அழித்துள்ளது.
TB2 பைரக்டர் ட்ரோன் மூலம் ரஷ்ய ரோந்து படகுகளை உக்ரைன் தாக்கி அழித்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Newly released footage of Ukrainian TB2 Bayraktar drone strikes on 2 Russian Raptor patrol boats reportedly near Snake Island.#Russia #Ukraine pic.twitter.com/9APo4actuM
— BlueSauron?️ (@Blue_Sauron) May 2, 2022
குண்டு மழை பொழியும்... ஜாக்கிரதை! பொதுமக்களுக்கு கவர்னர் எச்சரிக்கை
சில தினங்களுக்கு முன் கருங்கடலில் ரஷ்யா முக்கிய போர்க்கப்பலான மாஸ்க்வாவை ஏவுகணை மூலம் உக்ரைன் தாக்கி அழித்தது குறிப்பிடத்தக்கது.